Enable Javscript for better performance
தாமிரவருணி பாசன உரிமைகள்:வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தாமிரவருணி பாசன உரிமைகள்:வெள்ளை அறிக்கை வெளியிட கோரிக்கை

    By ஸ்ரீவைகுண்டம்,  |   Published on : 03rd August 2013 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசன உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதால், தாமிரவருணி பாசன உரிமைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென தாமிரவருணி நதிநீர் பாதுகாப்புப் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக அந்த பேரவையின் அமைப்பாளர் நயினார்குலசேகரன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:

    தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் கொடுப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், தாமிரவருணி பாசன சாகுபடி குறித்த உண்மை நிலைகளை அரசுக்கு தெரிவிக்காததால் 2012- 2013ம் ஆண்டுகளில் பிசானம், முன்கார், கார் சாகுபடிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

    38,583 ஏக்கர்களுக்கு கார்சாகுபடிக்கு அனுமதி கிடைக்காததால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர்கள் தரிசாக கிடக்கும் நிலை ஏற்பட்டு 5 லட்சம் குவிண்டால் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

    எனவே, தாமிரவருணி பாசன உரிமைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai