திருச்செந்தூர் கடைகளில் சோதனை
By திருச்செந்தூர், | Published on : 03rd August 2013 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்செந்தூர் பகுதியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர்.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மருத்துவர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையில், வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் முத்துராஜ், பாலசுப்பிரமணியன், பொன்முத்து ஞானசேகர், டைட்டஸ், மாரியப்பன் உள்ளிட்டோர் சோதனையில் ஈடுபட்டனர்.
சாத்தான்குளம், உடன்குடி, மெஞ்ஞானபுரம், திருச்செந்தூர், ஆறுமுகனேரி, ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இதில், ரூ.10 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.