Enable Javscript for better performance
தூத்துக்குடியில் மீனவர் குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் மீனவர் குறைதீர் கூட்டம்

    By தூத்துக்குடி,  |   Published on : 03rd August 2013 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    :தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    மீன்வளத்துறை உதவி இயக்குநர் பிரதீப்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜி.எஸ்.சமீரான், துணை ஆட்சியர் (பயிற்சி) மனுவேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், திரேஸ்புரம் நாட்டுப்படகு சங்கத் தலைவர் ஜான்சன் பேசுகையில், தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி இறங்கு தளத்தில் மின்விளக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும். திரேஸ்புரம் பகுதியில் பக்கிள் ஓடை கடலில் கலக்கும் பகுதியில் சிமென்ட் போடப்படாமல் உள்ளதாகவும், தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதால் மீன்வளம் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவித்தார்.

    முதல்வர் அறிவித்துள்ள கப்பல் கட்டும் தளத்தில் கப்பல் கட்டுதல், பழுதுநீக்கல், பழைய கப்பல்களை உடைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். கப்பல் கட்டும் தளம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மனுவாக கொடுத்தால், அதனை அரசுக்கு அனுப்பி உங்கள் குறைகளை போக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

    ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுப்பதில் சில கிராமங்கள் விடுபட்டு உள்ளன. எங்களின் எண்ணிக்கையை குறைத்து காண்பிக்க நடவடிக்கை எடுப்பதாக நினைக்கிறோம் என மீனவர் அந்தோனி பேசினார்.

    தருவைகுளம் ஊராட்சித் தலைவர் மகாராஜன் பேசுகையில், தூத்துக்குடி மீனவர்கள் ராமேசுவரத்துக்கு சென்று மீன்பிடிக்க வசதியாக பாம்பன் பாலத்தையொட்டியுள்ள ரயில்வே பாலத்தை குறிப்பிட்ட சில நேரங்களில் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    தொடர்ந்து, மீன்வளத் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு ஆட்சியர் ஆஷிஷ்குமார் வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai