Enable Javscript for better performance
பெண் மர்மச் சாவு: உறவினர்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் வெள்ளிக்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி அந்தோனியார்புரம் 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டியன் மகள் செல்வக்கனி (23). இவர் அண்ணாநகர் விவிடி சிக்னல் அருகேயுள்ள தனியார் செல்போன் நிறுவன முகவர் அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில், செல்வக்கனியின் சகோதரர் கனிராஜை வியாழக்கிழமை அழைத்த தென்பாகம் போலீஸார் செல்வக்கனி தூக்கிட்டு  தற்கொலை செய்துக் கொண்டதாகவும், அவரது சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனராம். இதையடுத்து செல்வக்கனியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், போலீஸார் செல்போன் நிறுவன முகவர் அலுவலக நிர்வாகிகளுக்கு துணை போவதாகவும் கூறி தென்பாகம் காவல் நிலையத்தை செல்வக்கனியின் உறவினர்கள் வியாழக்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.

    இதற்கிடையே உயிரிழந்த செல்வக்கனியின் உறவினர்கள் மற்றும் அந்தோனியார்புரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை காலை விவிடி சிக்னல் அருகேயுள்ள செல்வகனி பணிபுரிந்த அலுவலம் முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மாநகர காவல் துணைக் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் சேவியர் பெஸ்கி, தென்பாகம் காவல் ஆய்வாளர் கிங்க்ஸ்லி தேவானந்த், முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், வடபாகம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் குமரேசன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

    வருவாய் கோட்டாட்சியர் நாகஜோதி, வட்டாட்சியர் ஆழ்வாரம்மாள் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டக் குழுவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் தூத்துக்குடி- திருநெல்வேலி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து

    பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai