Enable Javscript for better performance
வாக்காளர் பட்டியல் திருத்தம் : தனியார் மையங்களுக்கு அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    வாக்காளர் பட்டியல் திருத்தம் : தனியார் மையங்களுக்கு அனுமதி

    By தூத்துக்குடி  |   Published on : 03rd August 2013 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பணிகளை மேற்கொள்ள தனியார் கணினி  மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், இதர விவரங்களை திருத்தம் செய்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்தல் மற்றும் அதற்கு நகல் எடுத்து வழங்குதல் தொடர்பான சேவைகளை ஆன்லைனில் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு விருப்பம் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டபூர்வமாக செயல்படும் கணினி மையங்களின் உரிமையாளர்கள் ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் ஆட்சியருக்கு மனு செய்து அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் பதிவு மையங்களாக செயல்பட அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, பெயர் மற்றும் இதர விவரங்களை செய்ய, இடமாற்றம் செய்ய விண்ணப்பம் ஆன்லைனில் பதிவு செய்ய கட்டணமாக ரூ 10 வசூல் செய்யலாம்.

     புகார் மனு பதிவு செய்யவும் ரூ.10 வசூல் செய்யலாம். அச்சு நகல் எடுக்க பக்கத்திற்கு ரூ.2 வசூல் செய்து கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai