Enable Javscript for better performance
அதிமுக அரசின் சாதனை விளக்க வாகனப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அதிமுக அரசின் சாதனை விளக்க வாகனப் பேரணி

    By திருச்செந்தூர்,  |   Published on : 04th August 2013 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூரில் அதிமுக அரசின் சாதனை விளக்க சின்னத்திரை வாகனப் பிரசாரப் பேரணி தொடங்கியது.

     சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் இப் பேரணியை மீனவரணி இணைச் செயலர் எஸ். ஜெனிபர் சந்திரன் தொடக்கிவைத்தார். ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத் தலைவரும் முன்னாள் ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலருமான க. விஜயகுமார் தலைமை வகித்தார். கோவில் தக்கார் ப.தா. கோட்டைமணிகண்டன், தென்திருப்பேரை ஜெயலலிதா பேரவைச் செயலர் கந்தன் முன்னிலை வகித்தனர்.

     மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் க. முத்தலிபா, பேரூராட்சி உறுப்பினர் அ. சண்முகசுந்தரம், கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவர் கு. முருகேசன், சங்க துணைத் தலைவர் நாராயணன், வார்டு செயலர் மணிகண்டன், ஒன்றிய அவைத் தலைவர் அமலி ஜெஸ்லர், ஒன்றிய மகளிரணிச் செயலர் ராணி, ஒன்றிய இளைஞர் பாசறைச் செயலர் க. வினோத், சரவணமுத்து, முனுசாமி, முன்னாள் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் இல்லங்குடி, திருச்செந்தூர் நகரச் செயலர் வி.எம். மகேந்திரன் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai