Enable Javscript for better performance
\\\"உதவித்தொகை: விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றோர் விண்ணப்பிக்கலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "உதவித்தொகை: விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றோர் விண்ணப்பிக்கலாம்'

    By தூத்துக்குடி,  |   Published on : 04th August 2013 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு தமிழக அரசின் ஊக்க உதவித்தொகை பெற இம் மாதம் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2013-14-ம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி விளையாட்டு வீரர்கள், மாணவர்கள் அல்லாதவர்களுக்கு ஊக்க உதவித்தொகையாக ரூ. 10 ஆயிரம், கல்லூரி, பல்கலைக்கழகத்தில் படிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 13 ஆயிரம் வழங்கப்படுகிறது.

     1.7.12 முதல் 30.6.13 வரையிலான காலக்கட்டத்தில் விளையாட்டுக் குழுமம், அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டுக் கழகங்கள், இந்திய விளையாட்டுக் குழுமம் நடத்தும் போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும்.  இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட விளையாட்டு அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு அரங்கம் (தருவை மைதானம்), தூத்துக்குடி என்ற முகவரியில் அலுவலக நேரத்தில் ரூ. 10 செலுத்திப் பெறலாம்.

     இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பத்தை விண்ணப்ப விலையான ரூ. 10-ஐ உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெயரில் அஞ்சல் ஆணையாகவோ, வங்கி வரைவோலையாகவோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை நேரடியாக இம் மாதம் 25-க்கு முன்பாக மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் தக்க அசல் சான்றிதழ் மற்றும் நகல் ஆகியவற்றுடன் நேரில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0461 2321149 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai