Enable Javscript for better performance
எட்டயபுரம் அருகே மரக்கிளையில் சிக்கி தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    எட்டயபுரம் அருகே மரக்கிளையில் சிக்கி தொழிலாளி சாவு

    By கோவில்பட்டி,  |   Published on : 04th August 2013 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டயபுரம் அருகே சனிக்கிழமை, மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி இறந்தார்.

    எட்டயபுரம் அருகேயுள்ள சுரைக்காய்ப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஏ. செல்வம் என்ற மகாலிங்கம் (55). இவருக்கு 2 மனைவிகள், 3 மகன்களும் உள்ளனர்.

     தொழிலாளியான இவர், ஆடுகள் வளர்த்து வந்தார். சனிக்கிழமை காலை, ஆடுகளுக்கு இலை பறிக்க ஊருக்கு மேற்கே ஈராச்சி செல்லும் சாலையில் வள்ளகுண்டுசாமிக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் ஏறினாராம்.

     அப்போது அவர் தவறி விழுந்தாராம். இதில் அவர் கிளையில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

     எட்டயபுரம் போலீஸார் சென்று சடலத்தைக் கைப்பற்றி, எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai