Enable Javscript for better performance
குறுக்குச்சாலை வழியாக ஓட்டப்பிடாரத்துக்கு பஸ்கள் இயக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    குறுக்குச்சாலை வழியாக ஓட்டப்பிடாரத்துக்கு பஸ்கள் இயக்கக் கோரிக்கை

    By ஓட்டப்பிடாரம்  |   Published on : 04th August 2013 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியிலிருந்து ஓட்டப்பிடாரத்துக்கு குறுக்குச்சாலை, மீனாட்சிபுரம் வழியாக அரசு பஸ் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

      தூத்துக்குடியிலிருந்து புதியம்புத்தூர் வழியாக ஓட்டப்பிடாரத்துக்கு அரசு, தனியார் பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. அதேபோல, குறுக்குச்சாலை, பாஞ்சாலங்குறிச்சி வழியாக அரசு பஸ் ஓட்டப்பிடாரத்துக்கு இயக்கப்படுகிறது.

    தூத்துக்குடியிலிருந்து குறுக்குச்சாலை, மீனாட்சிபுரம் வழியாக ஓட்டப்பிடாரத்துக்கு தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

      இப்போது ஓட்டப்பிடாரத்திலிருந்து கோவில்பட்டி, மதுரை, சென்னை, ராமநாதபுரம், விளாத்திகுளம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டுமானால்  குறுக்குச்சாலைக்குச் சென்று அங்கிருந்து செல்வது அதிகரித்துள்ளது.

    ஆனால் ஓட்டப்பிடாரத்தில் இருந்து மீனாட்சிபுரம் வழியாக குறுக்குச்சாலைக்குச் செல்ல அரசு பஸ் இல்லாததால் அவ்வழியே செல்லும் தண்ணீர் லாரிகள், தனியார் பஸ்களை நாட வேண்டியுள்ளது. அதேபோல, பல்வேறு பகுதிகளிலிருந்து வருவோர் குறுக்குச்சாலையில் இறங்கி ஓட்டப்பிடாரம் செல்ல வேண்டுமானால் மாலை 6 மணிக்கு பின்னர் பஸ்கள் எதுவும் இல்லை.

      இதனால் பயணிகள் அனைவரும் தூத்துக்குடி சென்று அதன்பின் ஓட்டப்பிடாரம் வரவேண்டியுள்ளது. இதனால் பயணிகளுக்கு காலவிரயமும், அதிக செலவும் ஆகிறது. எனவே, இரவு, பகல் நேரங்களிலும் குறுக்குச்சாலை, மீனாட்சிபுரம் வழியாக அரசு பஸ்கள் இயக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai