Enable Javscript for better performance
கோவிலில் திருட்டு:3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வேம்பாரில் கோவில் பூட்டை உடைத்து, 5 குத்துவிளக்குகள், உண்டியல் பணத்தைத் திருடிச் சென்றதாக 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

     வேம்பாரில் ஒரு சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட உமையம்மன் கோவிலில் சூரங்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்த ர. முத்தழகு (45) பூசாரியாக உள்ளார். இவர் வியாழக்கிழமை காலை கோவிலுக்குச் சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததாம்.

     தகவலின்பேரில் கோவில் நிர்வாகிகள், போலீஸார் சென்று பார்த்தபோது 5 குத்துவிளக்குகள் திருடுபோனதும், உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்ததாம்.

     முத்தழகு அளித்த புகாரின் பேரில், சூரங்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை வேம்பாரில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்கள், வேம்பார் சு. விக்னேஷ்செந்தில்குமார் (24), அக்கறையைச் சேர்ந்த மா. நெப்போலியன் (40), பாம்பன் ஏரியாவைச் சேர்ந்த த. திலகவடிவேல் (43) என்பதும், கடல் தொழிலாளிகளான அவர்களுக்கு வேம்பார் கோவிலில் நடந்த திருட்டில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை போலீஸார் கைது செய்து குத்துவிளக்குகளைப் பறிமுதல் செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai