Enable Javscript for better performance
கோவில்பட்டி அருகே வேன் கவிழ்ந்தது: 4 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி அருகே வேன் கவிழ்ந்தது: 4 பேர் காயம்

    By கோவில்பட்டி  |   Published on : 04th August 2013 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருகே, சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

     தென்காசி மாதாங்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சு. இசக்கி (70). கட்டடத் தொழிலாளி.  இவர் தனது உறவினர்கள் 20 பேருடன் சனிக்கிழமை அதிகாலை வேனில் தென்காசியிலிருந்து இருக்கன்குடி கோவிலுக்குச் சென்றார்.

       பின்னர் அவர்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். புளியரை குட்டித் தெருவைச் சேர்ந்த க. முத்துக்குமார் (32) வேனை ஓட்டி வந்தார்.

    சாத்தூர் வட்டம், சிவனடைந்தபுரம் அருகே வேன் திடீரென சாலையில் கவிழ்ந்ததாம்.

      இதில் இசக்கி, செங்கோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ரா. துரைராஜ் (48) உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர்.

     சாத்தூர் தாலுகா போலீஸார் சென்று காயமடைந்தோரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

      இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai