Enable Javscript for better performance
சாத்தான்குளம் அருகே விபத்து: இந்து முன்னணி மாநிலத் தலைவர் மகன் உள்பட இருவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகே விபத்து: இந்து முன்னணி மாநிலத் தலைவர் மகன் உள்பட இருவர் காயம்

    By சாத்தான்குளம்,  |   Published on : 04th August 2013 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே சனிக்கிழமை கார் கவிழ்ந்ததில், இந்து முன்னணி மாநிலத் தலைவரின் மகன் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

     சாத்தான்குளம் அருகேயுள்ள ஆனந்தவிளையைச் சேர்ந்தவர் டாக்டர் அரசுராஜா. மாநில இந்து முன்னணித் தலைவர். இவரது மகன் பூபதிபாண்டியன் (27). ஹோமியோபதி படிப்பு படித்துள்ள இவர் அரசுராஜா நடத்திவரும் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.

     இவர் தன் நண்பர்கள் திசையன்விளை சி. திருப்பதி (30), மோ. செல்வன் (32), ராமலிங்கம் (40), மருதநாச்சிவிளை செல்வராஜ் (48), முதலூர் முத்துக்குமார் (40) ஆகியோருடன் காரில் திசையன்விளையிலிருந்து பேய்க்குளத்துக்கு சனிக்கிழமை சென்றாராம். காரை பூபதிபாண்டியன் ஓட்டினாராம்.

     பன்னம்பாறை விலக்கில் உள்ள தனியார் பள்ளி சுற்றுச்சுவரில் கார் திடீரென மோதி கவிழ்ந்ததாம். இதில் பூபதிபாண்டியன், செல்வராஜ் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

     சாத்தான்குளம் சப் இன்ஸ்பெக்டர் தே. ஸ்டீபன் வழக்குப் பதிந்தார். இன்ஸ்பெக்டர் ப. அழகுதுரை விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai