Enable Javscript for better performance
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: 8-ல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு: 8-ல் தொடக்கம்

    By தூத்துக்குடி,  |   Published on : 04th August 2013 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-4 தேர்வு எழுதுவோருக்கு இம் மாதம் 8-ம் தேதிமுதல் இலவசப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

     இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் தேர்வில் வெற்றிபெற ஏதுவாக தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

     இம் மாதம் 8 முதல் 23 வரை விடுமுறை நாள்கள் தவிர அனைத்து வேலை நாள்களிலும் பிற்பகல் 3.30 முதல் மாலை 6.30 வரை இந்த வகுப்புகள் நடைபெறும். விருப்பமுள்ளோர் 8-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் பயிற்சிவகுப்பில் பங்கேற்கலாம். அவர்கள் தங்களின் அனைத்து அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்ததற்கான சான்றுகள் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai