Enable Javscript for better performance
தகராறு: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆத்தூர் அருகே வாழைத்தார் குத்தகைப் பணத்தைக் கேட்டவரிடம் தகராறு செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

     ஆத்தூர் அருகேயுள்ள சேர்ந்தபூமங்கலம் தேவர் தெருவைச் சேர்ந்தவர் வே. முருகன் (44). இவரது தோட்டத்திலிருந்து ரூ. 80 ஆயிரம் மதிப்பிலும், உறவினரான கணேசன் தோட்டத்திலிருந்து ரூ. 1.50 லட்சம் மதிப்பிலும், அரிரங்கன் தோட்டத்திலிருந்து ரூ. 50 ஆயிரம் மதிப்பிலும் 4 மாதங்களுக்கு முன்பு செபத்தையாபுரம் காமராஜ்நகரைச் சேர்ந்த ரா. கணேசன் (23) வாழைத்தார்களை குத்தகைக்கு எடுத்தாராம். ஆனால், அதற்கான பணம் கொடுக்கவில்லையாம்.

     இந்நிலையில், ஆத்தூர் பஸ் நிலையத்தில் கடந்த 31-ம் தேதி கணேசன் நின்றிருந்தாராம். அவரிடம் முருகன் வாழைத்தார்களுக்கான பணம் கேட்டாராம். அப்போது கணேசன் அவதூறாகப் பேசி, அவரிடம் தகராறு செய்தாராம்.

     ஆத்தூர் சிறப்பு உதவி ஆய்வாளர் சிதம்பரமூர்த்தி வழக்குப் பதிந்து, கணேசனை கைது செய்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai