Enable Javscript for better performance
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் ஆட்சியர் ஆய்வு

    By தூத்துக்குடி  |   Published on : 04th August 2013 02:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் நடைபெறும் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆஷிஷ்குமார் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

      தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை ஆலோசனைக் குழுக் கூட்டம் மீன்பிடி துறைமுக வளாக கூட்டரங்கில், ஆட்சியர் ஆஷிஷ்குமார் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

      மீன்பிடித் துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்,  துறைமுகத்தின் நுழைவுக் கட்டணம் திருத்தி அமைத்தல், வாகனக் காப்பகம் மற்றும் சங்க அலுவலகப் பயன்பாட்டுக்கு தளவாடப் பொருள்கள் வாங்குதல், கண்காணிப்பு கேமரா, புறக்காவல் நிலையம், முதலுதவி மற்றும் மருத்துவ வசதி ஏற்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

     அப்போது ஆட்சியர் ஆஷிஷ்குமார் திடீரென துறைமுக வளாகத்தில் நடைபெறும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்.  பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

     உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜி.எஸ். சமீரான், மீன் துறை உதவி இயக்குநர்கள் பிரபாவதி, பிரதீப்குமார், செயற்பொறியாளர் கங்காதரன், மீன்பிடித் துறைமுக மேலாண்மை சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai