Enable Javscript for better performance
வாலிபால் போட்டி: பாளை. அணி சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார், அமெரிக்கா அடனாய் ஸ்போர்ட்ஸ் அகாதெமி, மெஞ்ஞானபுரம் காமராஜ் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்திய பள்ளிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டியில் பாளையங்கோட்டை அணி சிறப்பிடம் பெற்றது.

     மெஞ்ஞானபுரம் அம்புரோஸ் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற போட்டியை இயேசு விடுவிக்கிறார் ஊழியர் அப்பாத்துரை ஜெபித்து தொடங்கிவைத்தார். இறுதிப் போட்டியில் பாளையங்கோட்டை சேவியர்ஸ் அணியும், தூத்துக்குடி கால்டுவெல் அணியும் மோதின. இதில் சேவியர்ஸ் அணி முதலிடம் பிடித்தது.

    அந்த அணிக்கு ரூ. 5 ஆயிரம், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையை அமெரிக்கா அடனாய் ஸ்போர்ட்ஸ் அகாதெமியைச் சேர்ந்த ஜேம்ஸ் வசந்தம், ப்ரீதம் ஆகியோர் வழங்கினர்.

    2-ம் இடம் பிடித்த தூத்துக்குடி கால்டுவெல் அணிக்கு ரூ. 4 ஆயிரம், பரிசுக் கோப்பையை ஆழ்வார்திருநகரி ஒன்றியத் தலைவர் க. விஜயகுமார் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலர் கிறிஸ்டோபர் ராஜன், மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் ஜான்வசீகரன், செயலர் ரமேஷ்குமார், உடன்குடி ஒன்றிய உறுப்பினர் குணசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai