Enable Javscript for better performance
விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவர் தீக்குளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவர் தீக்குளிப்பு

    By கோவில்பட்டி,  |   Published on : 04th August 2013 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளம் அருகே சனிக்கிழமை, பள்ளி மாணவர் தீக்குளித்தார்.

    ஆற்றங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட கல்குமியைச் சேர்ந்தவர் முனியசாமி- சண்முகத்தாய் தம்பதி மகன் ராஜ்குமார் (11). சிங்கிலிப்பட்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவரும், சகோதரர் அய்யனார் என்ற அஜித்குமாரும் விளையாடிக் கொண்டிருந்தனராம். அப்போது வீட்டுக்குள் சென்ற ராஜ்குமார், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துக் கொண்டாராம்.

     அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும், சகோதரரும் சென்று அவரை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai