Enable Javscript for better performance
 \\\"மின்வாரிய தொழில்நுட்ப பணியாளர் பணிக்கான காலிப் பணியிட விவரம் வெளியீடு\\\'- Dinamani

சுடச்சுட

    

     "மின்வாரிய தொழில்நுட்ப பணியாளர் பணிக்கான காலிப் பணியிட விவரம் வெளியீடு'

    By தூத்துக்குடி,  |   Published on : 05th August 2013 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப பணியாளர் பணிக்கான காலியிடங்கள் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கா. சண்முகசுந்தர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

     தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நிர்வாக கிளை தலைமைப் பொறியாளரால் தொழில் நுட்ப பணியாளர் பணிக்காலியிடங்கள் சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநருக்கு தெரிவிக்கப்பட்டு பட்டியல் கோரப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு பட்டியல் பரிந்துரை செய்ய சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனரால் மாநில பதிவுமூப்பு உத்தேச பட்டியல் (சீனியார்டி விவரம்) தயார் செய்யப்பட்டுள்ளது.

    தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தில் எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் 822 பணியிடங்களும், எலக்டிரிக்கல் அன்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 45 பணியிடங்களும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 48 பணியிடங்களும், இன்ஸ்ட்ரூமென்டேசன் அயின்ட் கண்ட்ரோல் இன்ஜினியரிங் 18 பணியிடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் அயின்ட் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்கனாலஜி 18 பணியிடங்களும் காலியாக உள்ளன.

     எனவே, இந்தப் பணிகளுக்குரிய கல்வித் தகுதியுடையவர்கள் தங்களின் பதிவுமூப்பு விவரங்களை மாநில பதிவுமூப்பு உத்தேச பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளுமாறும், பதிவுமூப்புக்குள் இருந்து பெயர் இடம் பெறாதவர்கள் தங்களின் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) நேரில் ஆஜராகி சரிபார்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai