அருந்ததியர் சங்க செயற்குழுக் கூட்டம்
By கோவில்பட்டி, | Published on : 05th August 2013 01:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழுக் கூட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். வட்டாரத் தலைவர் பெருமாள், மாவட்டத் துணைத் தலைவர் கணபதி, நகரத் தலைவர் செண்பகராஜ், வட்டார செயலர் குருசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, நிலுவையில் உள்ள சுதந்திர போராட்ட முதல் தளபதி ஒண்டி வீரர் மணிமண்டபத்தை விரைவில் கட்டி முடிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தியும், பாண்டவர்மங்கலம் கிராமத்தில் 502 பேருக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் பெற்ற பயனாளிகளுக்கு நில அளவை செய்துதராததைக் கண்டித்து இம்மாதம் 15-ம் தேதி அருந்ததியர் மக்கள் வாழும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றுவது, கோவில்பட்டி நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் பணியிடத்திற்கு 47 பேருக்கு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நேர்முகத் தேர்வு வரப்பெற்று, நேர்முகத் தேர்வு செய்யாமல் நகராட்சி நிர்வாகம் நிறுத்தியுள்ளதை உடனடியாக பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்டச் செயலர் மாரிமுத்து, மாவட்ட நிர்வாகச் செயலர் சண்முகநாதன், நகரச் செயலர் ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.