காமநாயக்கன்பட்டி ஆலய விண்ணேற்பு பெருவிழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
By கோவில்பட்டி, | Published on : 05th August 2013 01:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தேம்பாவணி காவியத்தை தந்த வீரமாமுனிவர் பங்குகுருவாக பணியாற்றிய காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஆக.6) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இவ்விழா 10 நாள்கள் தொடர்ந்து நடைபெறும். இதையொட்டி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு கொடியேற்று விழா அருள்தந்தை குழந்தைராஜ் தலைமையில் நடைபெறுகிறது.
தொடர்ந்து பண்டாரகுளம் ஆலய பங்குத்தந்தை சார்லஸ், சங்கர்நகர் ஆலய பங்குத்தந்தை அந்தோனிசாமி ஆகியோர் விழாவை வழிநடத்துகின்றனர்.
இம்மாதம் 10-ம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை மரியன்னை மாநாடு நடைபெறுகிறது. 11-ம் தேதி காலை 8 மணிக்கு புதுநன்மை விழாவும், 14-ம் தேதி மாலை 7 மணிக்கு ஆடம்பர கூட்டுத் திருப்பலி மற்றும் மாலை ஆராதனையும், 15-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பாளை மறை மாவட்ட மேதகு ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில், தேரடி திருப்பலியும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அந்தோனிசாமி, உதவி பங்குத்தந்தை வினோத்பால்ராஜ் மற்றும் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி இறைமக்கள் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து ஆலய பங்குதந்தை அந்தோணிசாமி, செய்தியாளர்களிடம் கூறுகையில், இவ்வாலயத்தின் விழா ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் நடைபெறுவது வழக்கம்.
இவ்விழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி, 15-ம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும், விழாவை முன்னிட்டு, சுகாதார வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் அவர்.