Enable Javscript for better performance
திருச்செந்தூர் வனபேச்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் வனபேச்சியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

    By திருச்செந்தூர்  |   Published on : 05th August 2013 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் மீனவர் காலனியில் உள்ள ஸ்ரீ வனபேச்சியம்மன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

       இக்கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆடிக்கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் கலந்துகொண்டு இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

       நிகழ்ச்சியில் திருச்செந்தூர் ஒன்றிய பாஜக தலைவர் எம்.சிவசெந்தில், ஒன்றிய பொதுச்செயலர் முத்துக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமேஸ்வரன்,  வழக்குரைஞர் சரவணன், இந்து முன்னணி ஒன்றியத் தலைவர் ஜெயசிங், நகரச் செயலர் எம்.முத்துராஜ், கோவில் விழாக் கமிட்டி தலைவர் க.சுப்பிரமணியபிள்ளை, வேல்நாடார், ஜெயகுமார், உலகநாதன், சாந்தாராம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai