Enable Javscript for better performance
தீ விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தீ விபத்து: பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருள்கள் அளிப்பு

    By தூத்துக்குடி,  |   Published on : 05th August 2013 01:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பல்வேறு நிவாரணப் பொருள்களை சட்டப்பேரவை உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

     தூத்துக்குடி அந்தோனியார்புரம் 3 சென்ட் பகுதியில் கடந்த 1 ஆம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மாரியம்மாள், ராமலட்சுமி, பானுமதி, சந்திரகலா ஆகியோருக்குச் சொந்தமான 4 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

     இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன் உடனடியாக அவர்கள் தங்குவதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்.

     மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம்  வழங்கிய அவர் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

     இந்நிலையில், பாதிக்கப்பட்ட நால்வரின் குடும்பத்தினருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் சி.த. செல்லப்பாண்டியன் ஞாயிற்றுக்கிழமை  சந்தித்து சமையல்  செய்வதற்கான பொருள்கள், பாத்திரங்கள், வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.  இதேபோல, தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதியில் தீ விபத்தில் வீட்டை இழந்த மரியம்மாளுக்கு ரூ. 5,000 மற்றும் வீட்டுக்குத் தேவையான சமையல் பொருள்களையும் வழங்கினார்.

      இந்நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், தனராஜ், பெரியசாமி, பொன்ராஜ், வட்டச் செயலர்கள் ஜெகநாதன், ஜெயகணேஷ், கந்தன், சரவணகுமார் நிர்வாகிகள் பி. மூர்த்தி, சங்கர், ஆர்.எல். ராஜா, பேச்சிமுத்து, அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai