Enable Javscript for better performance
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல்: எஸ்டிகே அணி வேட்பாளர்கள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல்: எஸ்டிகே அணி வேட்பாளர்கள் அறிவிப்பு

    By தூத்துக்குடி,  |   Published on : 05th August 2013 01:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தலில் எஸ்டிகே அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

      இதுகுறித்து எஸ்டிகே அணி சார்பில் லே செயலர் பதவிக்கு போட்டியிடும் எஸ்டிகே ராஜன் அளித்த பேட்டி:

       தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தலில் எங்களது அணி சார்பில் லே செயலர் பதவிக்கு நானும் (எஸ்டிகே ராஜன்), துணைத் தலைவர் பதவிக்கு எஸ்.ஜி. லூர்துராஜ் ஜெயசிங்கும், குருத்துவச் செயலர் பதவிக்கு ஜெ.எஸ். தேவராஜ் ஞானசிங்கும், பொருளாளர் பதவிக்கு டி. மோகனும் போட்டியிடுகிறோம்.

      இதற்கான தேர்தல் ஆகஸ்ட் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

     திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.

     நாங்கள் வெற்றிபெற்றால் திருண்டல அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுப்பதோடு, நிதிநிலையை சீராக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். திருமண்டல அலுவலகம் மற்றும் பேராயர் அலுவலகம் குறித்த கணக்குகள் கண்டிப்பாக தணிக்கை செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்படும்.

        குருமார் மற்றும் ஆசிரியர் பணிமாற்றம் பழிவாங்கும் நோக்கத்தில் நடைபெறாது. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு முன்னுரிமைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai