Enable Javscript for better performance
ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டுத் தற்கொலை - Dinamani

சுடச்சுட

    

    ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டுத் தற்கொலை

    By கோவில்பட்டி  |   Published on : 05th August 2013 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் ரியல் எஸ்டேட் அதிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

         கோவில்பட்டி ஜி.கே. நகரில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக மேற்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸார்  வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

       அப்போது, வீட்டின் உள்ளே ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

       விசாரணையில் அவர், ஜி.கே. நகரைச் சேர்ந்த பெத்தையா மகன் முருகன்(45) என்பதும், ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வந்ததும் தெரியவந்தது. இவருக்கு செல்வி(40) என்ற மனைவியும், இசக்கியம்மாள்(19), பிரேமா(18) ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

      மஞ்சக்காமாளை நோயால் அவதிப்பட்டு வந்த முருகன், கடந்த சில நாள்களுக்கு முன்பு தான் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு திரும்பினாராம்.

       இதையடுத்து வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

      இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai