ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா
By ஸ்ரீவைகுண்டம் | Published on : 05th August 2013 01:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஸ்ரீவைகுண்டத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராஜ் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு ஸ்ரீவைகுண்டம் வட்டார காமராஜர் நற்பணி மன்றத் தலைவர் அம்பிகாபதி ஜோதிடர் தலைமை வகித்தார்.
செயலர் அப்பாத்துரை, துணைச் செயலர் முத்துவேல், முன்னாள் பேரூராட்சி றத் தலைவர் செல்வராஜ், சட்ட ஆலோசகர் பெருமாள் பிரபு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் முத்துராஜ் வரவேற்றார்.
ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி உறுப்பினர் ஐசக் பால்ராஜ் 111 மாணவர், மாணவிகளுக்கு நோட்டுபுத்தகங்கள், பேனா மற்றும் பென்சில்களை வழங்கினார். விளையாட்டுப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாணவரணி பொறுப்பாளர் சதிஷ்குமார் நன்றி கூறினார்.