Enable Javscript for better performance
279 பேருக்கு விலையில்லா மடிக்கணினி அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    279 பேருக்கு விலையில்லா மடிக்கணினி அளிப்பு

    By தூத்துக்குடி  |   Published on : 05th August 2013 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், 279 மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி ஞாயிற்றுக்கிழமை  வழங்கப்பட்டது.

       விழாவுக்கு, அண்ணா பல்கலைக்கழக திருநெல்வேலி மண்டல இயக்குநர் டி.வி.எஸ்.பிள்ளை தலைமை வகித்தார். புலமை முதல்வர் ந.செண்பகவிநாயக மூர்த்தி முன்னிலை வகித்தார்.

      விழாவின்போது, 279 மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினியை வழங்கி அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் பேசியது:

      தமிழக மாணவர், மாணவிகள் கல்வி தரம் உலகளவில் போட்டி போடும் அளவில் முன்னேற்றம் பெறுவதற்காக விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் அறிவித்துள்ளார். கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த மடிக்கணினிகளை பார்த்து இருக்காத நிலையில், அவர்களும் பயன்பெறும் வகையில் தகுந்த நேரத்தில் மடிக் கணினியை வழங்கி அவர்களது வாழ்வில் முதல்வர் ஒளியேற்றியுள்ளார்.

      இதை நீங்களே பயன்படுத்தி உங்கள் கல்வி அறிவையும், ஆற்றலையும், பொது அறிவுகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

      நிகழ்ச்சியில் மேலூர்  கூட்டுறவு வங்கித் தலைவர் ஏசாதுரை, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள் தூத்துக்குடி சண்முகவேல், ஒட்டப்பிடாரம் காந்தி என்ற காமாட்சி, சாத்தான்குளம் சுரேஷ்குமார், வட்டாட்சியர் ஆழ்வாரம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai