Enable Javscript for better performance
\\\"அதிக முதலீட்டில் தொழில்கள் தொடங்க தூத்துக்குடி சிறந்த இடம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "அதிக முதலீட்டில் தொழில்கள் தொடங்க தூத்துக்குடி சிறந்த இடம்'

    By தூத்துக்குடி  |   Published on : 06th August 2013 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிக முதலீட்டில் கீழ்நிலை தொழில்கள் தொடங்க தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக வாய்ப்புகள் உள்ளன என்றார், ஸ்டெர்லைட் நிறுவன முதன்மை செயல் அலுவலர் ராம்நாத்.

    அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தூத்துக்குடி கிளை சார்பில் சென்னையில் அண்மையில் நடைபெற்ற "தூத்துக்குடியில் முதலீட்டு வாய்ப்புகள்' என்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:

    தூத்துக்குடி மாவட்டத்தில் மனித வளம், ரயில், சாலை, துறைமுகம் சிறந்த முறையில் அமைந்துள்ளதால் இம் மாவட்டம் முதலீட்டுக்கு சிறந்த இடமாக உள்ளது. பெரிய மின்னணு உற்பத்தி நிலையங்கள், கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் போன்றவை விரைவில் அமைய இருப்பதால் முதலீட்டுக்கு சிறந்த இடம்.

    ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாமிரத் தகடுகள், கந்தக அமிலம், ஜிப்சம் மற்றும் பெர்ரோ மணல் பயன்படுத்தி தூத்துக்குடியில் கீழ்நிலை தொழில்கள் அமைக்க முடியும். ஸ்டெர்லைட்டில் இருந்து கிடைக்கும் மூலப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு எனாமல் பூசிய தாமிரக் கம்பிகள்,  காப்பர் கீற்றுகள், காப்பர் கேபிள்கள், ஒற்றை சூப்பர் பாஸ்பேட் உரம் தயாரிப்பு போன்ற கீழ்நிலை தொழில்கள் தொடங்க முடியும்.

    ஸ்டெர்லைட் நிறுவனம் நீண்ட கால அடிப்படையில் கீழ்நிலை தொழில்களுக்கு மூலப்பொருள்கள் வழங்கும். மேலும் இதன் மூலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai