Enable Javscript for better performance
ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா- Dinamani

சுடச்சுட

    

    ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் ஸ்ரீகுருபூஜை விழா, உடன்குடி தேரியூர் ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மருத்துவர் ப.சுந்தர் தலைமை வகித்தார். மண்டல செயலர் பரமசிவன்,சேவாபாரதி ஒன்றிய இணைச் செயலர் நட்டார்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆரோக்கியபாரதி அமைப்பின் மாநில அமைப்புச் செயலர் தேவராஜ் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் சேவாபாரதி அமைப்பின் மாவட்டச் செயலர் கிருஷ்ணமந்திரம், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒன்றியச் செயலர் குமரேசன், கிளைச் செயலர் வீரபாண்டி, பாஜக மாவட்ட வர்த்தக பிரிவுத் தலைவர் ஆ.ரவி, உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் கா.ஜெயக்குமார், இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் சக்திவேல், நகரச் செயலர் பட்டுராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுடலைமுத்து, சேவாபாரதி மண்டல இணைச் செயலர் செந்தில்செல்வம், எல்ஐசி பாலசுப்பிரமணியன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai