Enable Javscript for better performance
இளைஞருக்கு கத்திக்குத்து: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் பைக்கில் வேகமாக சென்றதை தட்டிக் கேட்ட இளைஞரை கத்தியால் குத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், புதுச்சேரி மதுபானங்கள் மற்றும் கள்ளச் சாராய விற்பனையை தடுக்கக் கோரியும் பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸôர் தெரிவித்தனர்.

    கொங்கராயகுறிச்சியைச் சேர்ந்த நல்லதம்பி மகன் அன்புபட்டுராஜன் (30). காமராஜர் சிலை அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை நின்று கொண்டிருந்த போது  மணக்கரையைச் சேர்ந்த லட்சுமணன் மகன் வண்டிமலையான், அலங்காரம் என்ற சுப்பையா மகன் முருகன், இசக்கி மகன் பேச்சிமுத்து ஆகிய 3 பேரும் ஒரே பைக்கில் வேகமாக வந்துள்ளனர். ஊருக்குள் பைக்கிள் மெதுவாக செல்லுமாறு அன்புபட்டுராஜன் கூறினாராம். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் அன்புபட்டுராஜனை கத்தியால்  குத்தி விட்டு தப்பியோடிவிட்டனராம். இதில் பலத்தகாயம் அடைந்த அவர் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவைகுண்டம் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி திங்கள் கிழமை கொங்கராயகுறிச்சி காமராஜர் சிலை அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.  தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல் உதவி-ஆய்வாளர் வேல்ராஜ் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அனைவரும் மறியலை கைவிட்டு சாலை ஓரத்தில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதையடுத்து பிற்பகல் 2.30 மணியளவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் கொங்கராயகுறிச்சியில் ஆற்றுப்படுகையையொட்டியுள்ள அரபத் நகரில் உடைமரங்களின் நடுவே சிலர் புதுச்சேரி மதுபானங்களையும், கள்ளச்சாராயமும் விற்று வருகின்றனர். இதுகுறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸôரிடம் அவர்கள் வலியுறுத்தினர். காவல் உதவி-ஆய்வாளர் வேல்முருகன் உறுதியளித்தையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    3 பேர் கைது:  இந்நிலையில் செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் பட்டாணி, மணக்கரையைச் சேர்ந்த லட்சுமணன் மகன் வண்டிமலையான், அலங்காரம் என்ற சுப்பையா மகன் முருகன், இசக்கி மகன் பேச்சிமுத்து ஆகிய மூவரையும் கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai