Enable Javscript for better performance
உடன்குடி ஒன்றியத்தில்108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி ஒன்றியத்தில்108 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

    By உடன்குடி  |   Published on : 06th August 2013 02:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விநாயகர் சதுர்த்தியையொட்டி உடன்குடி ஒன்றியத்தில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

     இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உடன்குடி தேரியூர் ஆத்மஞான கணபதி ஆலய வளாகத்தில் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் சிங்காரபாண்டி தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச்செயலர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    நகரச் செயலர் பட்டுராஜன் வரவேற்றார். உடன்குடி ஒன்றியத்தில் 108 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது, உடன்குடியில் தாமிரவருணி ஆற்று நீருடன் உப்பு கலந்த நீரை கலந்து விநியோகம் செய்யாமல், நல்ல குடிநீரை விநியோகம் செய்யவேண்டும். வில்லிகுடியிருப்பிலிருந்து புதுமனை, சமத்துவ நகர் வழியாக குலசேகரன்பட்டினம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவுக்கு முன்பாக  இச்சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலர் சக்திவேல், மாவட்ட துணைத்தலைவர் பொன்பரமேஷ்வரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுடலைமுத்து, உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி செயலர் கேசவன், ஒன்றிய துணைத் தலைவர் ஜெயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai