Enable Javscript for better performance
கடாட்சபுரத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கடாட்சபுரத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

    By சாத்தான்குளம்,  |   Published on : 06th August 2013 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடாட்சபுரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டம்  நடைபெற்றது.

    தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் நடமாடும் ஆலோசனைக்குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்தை தேர்வு செய்து பெண்கள் பாதுகாப்பு சட்டம்  மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சாத்தான்குளம் அருகேயுள்ள கடாட்சபுரத்தில் இந்த ஆலோசனைக்குழு சார்பில் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு திருச்செந்தூர் அனைத்து காவல் நிலைய ஆய்வாளர் ராஜாமணி தலைமை வகித்தார். சாத்தான்குளம் ஒன்றிய துணைத் தலைவர் ஜெயராணி முன்னிலை வகித்தார். மகளிர் காவல் நிலைய உதவி-ஆய்வாளர் மேரி வரவேற்றார். இதில் பெண்களுக்கான வன்கொடுமை சட்டம் மற்றும் குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி, பராமரிப்பு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    மேலும் ஆதரவற்ற குழந்தைகளை தூத்துக்குடியில் செயல்படும் குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுகுறித்த தகவல் தெரிவித்தால் காவல் நிலையம் சார்பில் அதில் சேர்க்க உதவிகள் செய்யப்படும் எனவும் காவல் ஆய்வாளர் ராஜாமணி தெரிவித்தார்.

    இதில், ஊராட்சி அதிமுக செயலர் தங்கராஜ், கிளைச் செயலர் ஜெயசிங், மகளிர் குழுத் தலைவிகள் ஜெயசீலி, சாரதா, மேலவை அதிமுக பிரதிநிதி முத்துபாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ஒன்றிய கவுன்சிலர் சரோஜினி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai