காயல்பட்டினத்தில் முஸ்லிம் லீக் அரிசி விநியோகம்
By ஆறுமுகனேரி, | Published on : 06th August 2013 02:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ரமலான் மாதத்தை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் கிளை சார்பில், ஏழை எளிய மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரத் தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமை வகித்து, ஏழை, எளியவருக்கு அரிசி விநியோகத்தைத் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் நகரச் செயலர் ஏ.எல்.எஸ்.அபூ ஸôலிஹ், பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட துணைத் தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் எம்.ஏ.சி.சுஹைல் இப்ராஹீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் 1,500 பேருக்கு தலா ஒன்றரை கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.