Enable Javscript for better performance
சத்துணவு கூடத்தில் ஊராட்சித் தலைவர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    சத்துணவு கூடத்தில் ஊராட்சித் தலைவர் ஆய்வு

    By சாத்தான்குளம்  |   Published on : 06th August 2013 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுண்டங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்தை பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவர் இரா.திவாகரன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

     தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உணவு தரமானதாக இருக்க வேண்டும் எனவும், பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இதை பார்வையிட்டு ஆய்வு நடத்தி பள்ளி மாணவர், மாணவிகளுக்கு சுகாதாரமான உணவு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

     அதன்படி சாத்தான்குளம் அருகேயுள்ள சுண்டங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு கூடத்தை பள்ளக்குறிச்சி ஊராட்சித் தலைவர் இரா.திவாகரன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளரிடம் தரமான உணவு வழங்கிட தேவையானவற்றை கேட்டால் தர தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி, ஊராட்சிச் செயலர் வி.ராஜேஷ்,  சத்துணவு அமைப்பாளர் இன்பராஜ் ஆகியோர் இருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai