Enable Javscript for better performance
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By கோவில்பட்டி  |   Published on : 06th August 2013 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவில்பட்டி தாலுகா குழு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வறட்சி நிவாரணம் வழங்கப்படாத விவசாயிகளுக்கும் உடனே வழங்க வேண்டும். 2012 - 2013-ம் ஆண்டுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். ஊரகப் பணிகளை விவசாயப் பணியுடன் இணைக்க வேண்டும். விவசாயக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

    உழவர் அட்டை வழங்கப்படாத விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். 60 வயது நிரம்பிய உழவர் அட்டை உள்ளவர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி அரசு அலுவலக வளாகம் முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா விவசாயிகள் சங்கச் செயலர் லெனின்குமார் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் சேதுராமலிங்கம் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அய்யலுசாமி, ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் மோகன்ராஜ், மாநிலக் குழு உறுப்பினர் அழகுமுத்துபாண்டியன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க எட்டயபுரம் வட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட அமைப்பாளர் தமிழரசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் நல்லையா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டத் தலைவர் முத்துகுமார், செயலர் பாலமுருகன் உள்பட தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai