Enable Javscript for better performance
தூத்துக்குடியில் 100 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் - Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடியில் 100 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

    By தூத்துக்குடி  |   Published on : 06th August 2013 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி அருகே மினிலாரியில் கடத்திச் செல்லப்பட்ட 100 மூட்டை ரேஷன் அரிசியை அதிகாரிகள் மற்றும் போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இருவரை போலீஸôர் கைது செய்தனர்.

    தூத்துக்குடி அருகே உள்ள கீழஅரசடி கிழக்கு கடற்கரை சாலை விலக்கு பகுதியில் ஒரு மினிலாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து மாவட்ட வழங்கல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் உணவுப் பொருள்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினிலாரியை சோதனையிட்டபோது, லாரியில் 100 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  உடனடியாக அதிகாரிகள் மினிலாரியுடன் 100 மூட்டை ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, மினிலாரி ஓட்டுநர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சுடலைமுத்து (24), தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வன் (31) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.  மேலும், ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்திச் செல்லப்படுகிறது என்பது குறித்து போலீஸôர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai