Enable Javscript for better performance
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல்: டிஎஸ்எப் அணி வேட்பாளர்கள் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தல்: டிஎஸ்எப் அணி வேட்பாளர்கள் அறிவிப்பு

    By தூத்துக்குடி,  |   Published on : 06th August 2013 02:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     

    தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல தேர்தலில் டிஎஸ்எப் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல தேர்தலில் டிஎஸ்எப் அணியின் சார்பில் லே செயலர் பதவிக்கு போட்டியிடும் டி.பால்பாண்டி அளித்த பேட்டி:

    ஆகஸ்ட் 7 மற்றும் 8-ம் தேதிகளில் நடைபெறும் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல நிர்வாகிகளுக்கான தேர்தலில் டிஎஸ்எப் அணி சார்பில் திருமண்டல உபதலைவர் வேட்பாளராக குருவானவர் ஜெரேமியாவும், திருமண்டல குருத்துவச் செயலர் வேட்பாளராக குருவானவர் ஜெயசிங்கும், திருமண்டல லே செயலர் வேட்பாளராக டி.பால்பாண்டியும், திருமண்டல பொருளாளர் வேட்பாளராக சசிகரனும் போட்டியிடுகின்றனர்.

    திருமண்டல செயற்குழு வேட்பாளர்களையும் மற்றும் துணைக் குழு நிர்வாகிகளையும் பெருமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்து, வெற்றி பெற செய்ய வேண்டும்.

    நாங்கள் நிர்வாகத்துக்கு வந்தவுடன் சில ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள திருமண்டல வளர்ச்சிப் பணிகள் தொடருவதற்கு முழு நடவடிக்கை எடுக்கப்படும். அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பேராயர் தொடர்ந்து பணியாற்றுவதற்கு முழு முயற்சி எடுக்கப்படும்.

    திருமண்டலத்தில் செயல்பட்டுவரும் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டு திருச்சபை மக்களுக்கு பயன்படும் விதமாக நவீனமயமாக்கப்படும். திருமண்டல அலுவலகம் உடனடியாக கட்டப்பட்டு, திருமண்டலத்தால் செயல்படுத்தப்படும்.

    சட்டத்துக்கு விரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் திரும்பப் பணியமர்த்தப்படுவர். திருமண்டல மக்களின் நலனுக்காகவும் மற்றும் பல்வேறு சமூக வளர்ச்சிப் பணிகளுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai