Enable Javscript for better performance
நிதி இழப்பு செய்ததாக 2 ஊராட்சித் தலைவர்கள் நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    நிதி இழப்பு செய்ததாக 2 ஊராட்சித் தலைவர்கள் நீக்கம்

    By தூத்துக்குடி,  |   Published on : 06th August 2013 02:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நிதி இழப்பு செய்ததாக 2 ஊராட்சித் தலைவர்களைப் பதவிநீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஊராட்சி ஒன்றியம், கட்டாலங்குளம் ஊராட்சித் தலைவர் த.சின்னத்தாய் தனது சுய லாபத்துக்காகவும், பொதுநன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் முறைகேடுகள் புரிந்து அரசு விதிமுறைகளை மீறியும், ஊராட்சிக்கு ரூ. 6 லட்சத்து ஆயிரத்து 792 நிதி இழப்பை திட்டமிட்டு ஏற்படுத்தியும், அதிகார துஷ்பிரயோகமும் செய்து உள்ளார்.

    இதேபோல, அசூர் ஊராட்சித் தலைவர் செ.சண்முகத்தாய் தனது சுய லாபத்துக்காகவும், பொதுநன்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் முறைகேடுகள் புரிந்து அரசு விதிமுறைகளை மீறியும், உரிய அரசாணைகளில் கூறப்பட்டு உள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல் மனைப்பிரிவு அங்கீகாரம் வழங்கி ஊராட்சிக்கு ரூ.1 கோடியே 5 லட்சத்து 82 ஆயிரத்து 902 நிதி இழப்பைத் திட்டமிட்டு ஏற்படுத்தி உள்ளார்.

     பொதுநன்மையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 உட்பிரிவு 11-ல் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தின்படி கட்டாலங்குளம் ஊராட்சித் தலைவர் பதவியில் இருந்து த.சின்னத்தாயும், அசூர் ஊராட்சித் தலைவர் பதவியில் இருந்து செ.சண்முகத்தாயும் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    எனவே, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரங்களின்படியும், ஊராட்சிகளுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தாத வகையில் செயல்பட மற்ற கிராம ஊராட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai