Enable Javscript for better performance
மார்க்சிஸ்ட்  நடைப்பயணம் நிறைவு- Dinamani

சுடச்சுட

    

      தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நடைபெற்ற நடைப்பயணத்தின் நிறைவில் ஆத்தூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

     பொதுக்கூட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் தங்கராஜ் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி மற்றும் மாவட்டச் செயலர் அர்ச்சுனன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

     கூட்டத்தில் தூத்துக்குடி நகரச் செயலர் குமாரவேல், புறநகர் செயலர் பேச்சிமுத்து, திருச்செந்தூர் ஒன்றியச் செயலர் பன்னீர்செல்வம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியச் செயலர் கந்தசாமி, ஆழ்வை ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேவாரம், பர்வதராஜன், முத்தையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.  முன்னதாக சேதமடைந்துள்ள தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையைச் சீரமைக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேற்கொண்ட நடைப்பயணத்தை ஆத்தூரில் நிறைவு செய்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai