Enable Javscript for better performance
வியாபாரிகள் நலச் சங்கக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை அனைத்து வியாபாரிகள் நலச் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செயலர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மந்தித்தோப்பு சாலை அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவராக ராமச்சந்திரன், துணைத் தலைவராக சங்கர், செயலராக பழனிசாமி, துணைச் செயலராக வேல்முருகன், பொருளாளராக சீனிவாசன், கெüரவ ஆலோசகராக கே.செல்வராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    கூட்டத்தில், பேரமைப்பு வடக்கு மாவட்ட ஆலோசகர் சிவா, தொழிலதிபர்கள் கருப்பசாமி, மு.பெ.செல்வராஜ், திருப்பதிராஜா, முத்துராஜா, மோகன்ராஜ், ஜெயராஜ், இளவரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai