Enable Javscript for better performance
அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் 3-ம் பிரிவு, தபால்காரர் 4-ம் பிரிவு மற்றும் கிராமப்புற ஊழியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பணியில் சேர்ந்து ஓராண்டுக்கு மேலான கிராமப்புற ஊழியர்களை பணி நிரந்தரமாக்கி, போனஸ் மற்றும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். கோட்ட அலுவலகங்களில் பணி செய்யும் அலுவலக உதவியாளர்களை சனி மற்றும் விடுமுறை நாள்களில் பணிக்கு வரச் சொல்லி நிர்பந்தம் செய்யக் கூடாது.

    கோட்ட அளவிலான கிராமப்புற ஊழியர்களின் சேவை அடிப்படையிலான பதிவுமூப்பு பட்டியலை உடனே வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    கோவில்பட்டி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டத் தலைவர்கள் சுவாமிநாதன் (3-ம் பிரிவு), கண்ணன் (தபால்காரர்), மணி (கிராமப்புற ஊழியர்) ஆகியோர் தலைமை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், கோட்டச் செயலர்கள் பொன்னுச்சாமி (3-ம் பிரிவு), பாலசுப்பிரமணியன் (கிராமப்புற ஊழியர்), மாநில உதவிச் செயலர் ஜேக்கப்ராஜ் (3-ம் பிரிவு), மாநில உதவித் தலைவர் முருகேசன் (தபால்காரர்) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai