Enable Javscript for better performance
ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டிப் போட்டி: மேட்டூர், மருகால்குறிச்சி காளைகள் சிறப்பிடம்- Dinamani

சுடச்சுட

    

    ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டிப் போட்டி: மேட்டூர், மருகால்குறிச்சி காளைகள் சிறப்பிடம்

    By ஓட்டப்பிடாரம்  |   Published on : 07th August 2013 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஓட்டப்பிடாரம் அருகே கவர்னகிரியில் நடைபெற்ற மாட்டுவண்டிப் போட்டியில் மேட்டூர், மருகால்குறிச்சி காளைகள் சிறப்பிடம் பெற்றன.

    கவர்னகிரியில் இருந்து ஓட்டப்பிடாரம், பசுவந்தனை சாலை வழியாக திங்கள்கிழமை மாலை மற்றும் செவ்வாய்க்கிழமை காலையில் மாட்டுவண்டிப் போட்டி நடைபெற்றது. திங்கள்கிழமை மாலையில் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டுவண்டிப் போட்டியில் 22 ஜோடி காளைகள் கலந்துகொண்டன. முதல் பரிசை மேட்டூர் மாரியப்பன், 2-ம் பரிசை முத்தூர் கருப்பசாமி, 3-ம் பரிசை சிங்கிலிபட்டி சங்குச்சாமி ஆகியோரின் காளைகள் வென்றன.

    செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்ற பெரிய மாட்டுவண்டிப் போட்டியில் 12 ஜோடி காளைகள் கலந்துகொண்டன. முதல் பரிசை மருகால்குறிச்சி சுப்பம்மாள் கரையடி கருப்பன், 2-ம் பரிசை செக்காரக்குடி ராஜா, 3-ம் பரிசை சக்கம்மாள்புரம் தாவீது ஆகியோரின் காளைகள் வென்றன.

    சிறிய மாட்டுவண்டிப் போட்டியில் 20 ஜோடி காளைகள் கலந்து கொண்டதால் 2 பிரிவாக போட்டி நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை ஜம்புலிங்கபுரம் சிவகுட்டி, 2-ம் பரிசை வேப்பன்குளம் செந்தூர்பாண்டியன், 3-ம் பரிசை டி.துரைச்சாமிபுரம் பத்மநாதன் ஆகியோரின் காளைகள் வென்றன.

    இரண்டாவது பிரிவு போட்டியில் முதல் பரிசை மலவராயநத்தம் ராமசாமி, 2-ம் பரிசை சக்கம்மாள்புரம் தாவீது, 3-ம் பரிசை மிளகுநத்தம் செல்வமுருகன் ஆகியோரின் காளைகள் வென்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai