Enable Javscript for better performance
காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம்- Dinamani

சுடச்சுட

    

    காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றம்

    By கோவில்பட்டி  |   Published on : 07th August 2013 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி அருகேயுள்ள காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலயத்தின் விண்ணேற்பு பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தேம்பாவனி காவியத்தை இயற்றிய வீரமாமுனிவர்

    பங்கு குருவாக இருந்த இந்த ஆலயத்தின், 330-வது ஆண்டு விண்ணேற்பு பெருவிழா கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி, மிக்கேல் அதிதூதரின் பவனி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, கொடிமரம் நடப்பட்டது. பின்னர் கொடிமரத்தில் முதலாவதாக ஆலய கொடியும், அதனைத் தொடர்ந்து இறைமக்கள் கொண்டு வந்திருந்த வண்ணக் கொடிகளும் அணிவகுப்பாக கட்டப்பட்டன. சங்கர்நகர் ஆலய பங்குத்தந்தை அந்தோனிசாமி கொடியை ஆசீர்வதித்த பின்பு கொடியேற்றப்பட்டது.

    பண்டாரகுளம் ஆலய பங்குத்தந்தை சார்லஸ் மறையுரையாற்றினார். புளியம்பட்டி ஆலய பங்குத்தந்தையும், கோவில்பட்டி வட்டார அதிபருமான குழந்தைராஜ் திருப்பலி நிறைவேற்றினார். அசன விருந்தும் நடைபெற்றது. சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) பணங்குடி ஆலய பங்குத்தந்தை பர்னபாஸ் தலைமையில்  மரியன்னை மாநாடு நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) காலை 8 மணிக்கு புதுநன்மை விழா, புதன்கிழமை (ஆகஸ்ட் 14) மாலை 7 மணிக்கு மதுரை ஆலய பங்குத்தந்தை ஜோசப்செல்வராஜ், வெள்ளமடம் ஆலய பங்குத்தந்தை எரோணிமுஸ்குருஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத் திருப்பலி மற்றும் மாலை ஆராதனை நடைபெறுகின்றன.

    வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) அதிகாலை 2.30 மணிக்கு பாளை மறை மாவட்ட ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில், தேரடி திருப்பலி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை அந்தோனிசாமி, உதவி பங்குத்தந்தை வினோத்பால்ராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai