Enable Javscript for better performance
குலசேகரன்பட்டினத்தில் கும்பம் திருவீதியுலா- Dinamani

சுடச்சுட

    

    குலசேகரன்பட்டினத்தில் கும்பம் திருவீதியுலா

    By உடன்குடி,  |   Published on : 07th August 2013 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குலசேகரன்பட்டினம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலின் ஆடிக் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இதையொட்டி திங்கள்கிழமை இரவு மாக்காப்பு தீபாராதனையும், செவ்வாய்க்கிழமை காலையில் அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறுகின்றன.

    அதன்பின்பு கும்பம் திருவீதி எழுந்தருளல் நிகழ்ச்சியும், சிறப்பு அன்னதானமும் நடைபெற்றன. இரவில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், கும்பம் திருவீதி எழுந்தருளலும் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை திருநெல்வேலி இணை ஆணையர் ம.அன்புமணி, தூத்துக்குடி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையரும், தக்காருமான க.செல்லத்துரை, கோவில் நிர்வாக அதிகாரி தி.சங்கர் உள்பட பலர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai