Enable Javscript for better performance
தச்சமொழியில் 108 பால்குட ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    தச்சமொழி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி, 108 பால்குட ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    இக் கோவில் கொடை விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலையில் உவரியிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல், ஸ்ரீஅழகம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ பெருமாள், அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு வருஷாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெற்றன. இரவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    செவ்வாய்க்கிழமை காலையில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இரவு முளைப்பாரி ஊர்வலம், அம்மன் சப்பர பவனி ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை (ஆகஸ்ட் 7) இரவு 7 மணிக்கு அம்மன் தீச்சட்டி ஏந்தி நகர்வலம் வருதல், 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு மாவிளக்கு பூஜை, 10 மணிக்கு மெல்லிசை விருந்து, 12 மணிக்கு அம்மனுக்கு படைப்பு பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) காலை 6 மணிக்கு உணவு எடுத்தல், 7 மணிக்கு பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெறுகின்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai