Enable Javscript for better performance
தனியார் கல்லூரியில் மின்சாரம்பாய்ந்து தூத்துக்குடி பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தனியார் கல்லூரியில் மின்சாரம்பாய்ந்து தூத்துக்குடி பெண் சாவு

    By நாமக்கல்,  |   Published on : 07th August 2013 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகேயுள்ள தனியார் கல்லூரி உணவகத்தில் மின்சாரம் பாய்ந்து தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி உயிரிழந்தார்.

      தூத்துக்குடி மாவட்டம், இலந்தைக்குளத்தைச் சேர்ந்த சாத்தையாவின் மனைவி சரஸ்வதி (60). இவர் நாமக்கல்லை அடுத்துள்ள பாச்சல் கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி உணவகத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.  இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சரஸ்வதி பாத்திரங்களைக் கழுவ, அவற்றை ஹீட்டருக்குள் போட்டார். சிறிது நேரம் கழித்து ஹீட்டரின் மின்சாரத்தை துண்டிக்காமலேயே அவர் பாத்திரங்களை எடுக்க முயன்றார். அப்போது, தண்ணீரில் பரவியிருந்த மின்சாரம் பாய்ந்து சரஸ்வதி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த புதுச்சத்திரம் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், இது தொடர்பாக கல்லூரி உணவக ஊழியர்கள், கல்லூரி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai