Enable Javscript for better performance
நாசரேத்தில் பா.ஜ.க. உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மைப் பிரிவு சார்பில், நாசரேத் பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    நாசரேத் நகரப் பகுதியில் உள்ள மதுபான கடைகள் அனைத்தையும் இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் உண்ணாவிரதத்தில் வலியுறுத்தப்பட்டன.

    தூத்துக்குடி பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவு மாவட்டத் தலைவர் ஆல்பர்ட் சாமுவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் அபுபக்கர் வரவேற்றார். பா.ஜ.க. சிறுபான்மைப் பிரிவு மாநில தலைவர் ஈபன் ஜெயசீலன் உண்ணாவிரதத்தைத் தொடங்கி வைத்தார்.

    பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாகண்ணன், மாவட்டத் தலைவர் கனகராஜ், துணைத் தலைவர்கள் செல்வராஜ், செந்தில், ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் நடராஜன், லிவிங்டன், ஆசீர்வாதம் உள்ளிட்ட சிறுபான்மைப் பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai