Enable Javscript for better performance
பள்ளியில் எம்.எல்.ஏ. ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

    பள்ளியில் மாணவர் வருகை விவரம், வகுப்பறைக் கட்டடம் மற்றும் சுகாதாரம் குறித்து ஆசிரியர்களிடம், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு உடற்கல்வி சீருடையினை வழங்கினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக் கட்டடம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் அதனை சீரமைத்து, புதிய கட்டடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித் துறையிடம் அறிவுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது அவசரகால நடவடிக்கையாக பள்ளியில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்யப்படும் என்றார் அவர்.

    திருச்செந்தூர் பேரூராட்சி உறுப்பினர்கள் ஜெ.அந்தோனிட்ரூமன், மா.சுதாகர், சு.கோமதிநாயகம், வீ.முருகானந்தம், கானம் பேரூராட்சித் தலைவர் வெ.செந்தமிழ்சேகர், உடன்குடி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் லூக்காஸ், மணல்மேடு மா.சுரேஷ், வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சி உறுப்பினர் எம்.சிவபெருமாள், வழக்குரைஞர் கிருபா ஆகியோர் உடன் சென்றனர்.

    பள்ளித் தலைமை ஆசிரியர் சி.அருளப்பன், உதவித் தலைமை ஆசிரியை முத்துகனி, உடற்கல்வி ஆசிரியர் தமிழ்மாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai