Enable Javscript for better performance
புகையிலைப் பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் விற்பனைக்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை, உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ்சந்திரபோஸ் உத்தரவின் பேரில், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் முத்துக்குமார் (கோவில்பட்டி), மாரிச்சாமி (கிராமப் பகுதி), பொன்ராஜ் (கயத்தாறு) மற்றும் கோவில்பட்டி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் காஜா, முருகன், ஜஹாங்கீர் ஆகியோர் கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது, அ.ராஜ் என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, அவர்களது குடோனை சோதனையிட்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai