Enable Javscript for better performance
மதுக் கூடங்களில் சோதனை: 4 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி பகுதிகளில் உள்ள மதுக் கூடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது, விதிமீறி மதுவிற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    உடன்குடி பகுதிகளில் உள்ள மதுக் கூடங்களில் இரவு 10 மணிக்கு மேல் விதிமீறி மது விற்பதாக புகார் எழுந்தது. இதன்பேரில் மதுவிலக்கு தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் செல்வகணேசன் தலைமையில் போலீஸார் மதுக்கூடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுவை பதுக்கி வைத்து இரவில் விற்பனை செய்ததாக தீத்தாபுரத்தைச் சேர்ந்த கா.சுடலைராஜ் (28), தேரியூரைச் சேர்ந்த செ.நாராயணன் மாடசாமி (38), சாத்தான்குளம் பன்னம்பாறையைச் சேர்ந்த க.பேச்சி (45), தேரியூரைச் சேர்ந்த பா.பத்மநாபன் (44) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai