Enable Javscript for better performance
அம்பலசேரி பள்ளியில் ஆவணங்கள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    அம்பலசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆவணங்களை திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    சாத்தான்குளம் அருகேயுள்ள அம்பலசேரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப் பள்ளித் தலைமை ஆசிரியர் சத்யா( 50) திங்கள்கிழமை மாலையில் பணி முடித்த பின் பள்ளியை பூட்டிச் சென்றாராம்.  செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு வந்தபோது பள்ளியின் பூட்டு உடைப்பட்டு கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த மடிக்கணினி சார்ஜர் மற்றும் பள்ளியின் முக்கிய பழைய ஆவணங்கள் திருடு போனது தெரிய வந்தது.  இது குறித்து தலைமை ஆசிரியை சத்யா சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  சிறப்பு உதவி -ஆய்வாளர் ஜாண்சன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai